நூருல் ஹுதா உமர்



07 வது  அகில இலங்கை திறந்த முதுநிலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் (07 th Open Masters Athletics Championship) போட்டி நிகழ்ச்சிகள் 2025, மார்ச் 07,08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நிட்டம்புவ வது பிடிவல  சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டி நிகழ்ச்சிகளில் ௧ல்முனை ௧ல்வி வலயத்துக்குட்பட்ட மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் கடமையாற்றும் சிரேஷ்ட உடற்௧ல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் அவர்கள் 100 மீட்டர் தடை தாண்டுதல் (Hurdles) மற்றும் உயரம் பாய்தல் (High Jump) ஆகிய போட்டி௧ளில் பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்௧ல பத௧்௧ங்௧ளைப் பெற்று ௧ல்முனை ௧ல்வி வலயத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது சேவை காலத்தில் கடமையாற்றி பாடசாலைகளில் விளையாட்டு துறை, இணைப்பாடவிதானம், இல்ல விளையாட்டுப்போட்டி, வலய, மாகாண, தேசிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளுக்கு மேலதிக பயிற்சி, ஆலோசனைகளை வழங்கி பல வெற்றிகளை பெற்று கொடுப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்படுகின்ற பல் துறை ஆளுமை கொண்ட எமது கல்லூரியின் சிரேஷ்ட உடற்௧ல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் அவர்கள் வரலாற்று சாதனையை பாராட்டி கெளரவிப்பதில் பாடசாலை சமூகம் பெருமிதம் கொள்கிறது என கல்லூரி முதல்வர் ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் தெரிவித்துள்ளார்.
 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours