கமல்



களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட ஓந்தாச்சிமடம் சந்தையில் மனித உடல் நலத்திற்கு ஒவ்வாத மீன்களை விற்பனைக்காக கொண்டு வந்த வியாபாரிக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட  ஆறு மாதகால கடூழீய சிறைத்தண்டனையும் 18000 ருபாய் தண்டாப்பணமும் விதித்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்களினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட ஓந்தாச்சிமடம்பகுதியில் மனித உடல் நலத்திற்கு ஒவ்வாத நிலையில் பழுதடைந்த நிலையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் 58 கிலோ பாரை மீன்களை பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் ல்.கஜனன் அவர்களினால்  கைப்பற்றபட்டுள்ளது.

இதனையடுத்து  பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் த.கஜனன் அவர்களினால் குறித்தவியாபாரிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது 

இதனைத் தொடர்ந்து  வழக்கினை நேற்று முன்தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இதன் போதே குற்றவாளிக்கு எதிராக மேற்படி தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது..
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours