( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில்
குட்நிக் மைதானம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு பிரபல சமூக
செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர்
பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் 25 லட்ச ரூபாவை வழங்கியுள்ளார்.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா கழகச் செயலாளர் கே.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது.
1981ஆம்
ஆண்டு, திருக்கோவில் சமூக செயற்பாட்டாளர் வாவி அவர்களால் தொடங்கப்பட்ட
குட்நிக் மைதானம், பல வேலைத்திட்டங்கள் நடந்திருந்தாலும், முழுமையாக
அமையாமல் இருந்தது.
இப் பிரமாண்டமான அடிக்கல் நாட்டு விழாவிற்கு
விருந்தினர்களாக
SSK CONSTRUCTION முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். குணபாலன்

ஆலய குரு சிவஸ்ரீ கிருபாகர சர்மா
ZECTA அமைப்பு செயலாளர் எஸ். சதீஸ்வரன்
மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
8 அணிகளின் உதைபந்தாட்ட வீரர்களுக்கான கழக சீருடை அறிமுகம் நடைபெற்றது.
குட்நிக் விளையாட்டு கழகத்தினர் தொழிலதிபர் சு.சசிகுமாருக்கு ஆளுயர மலர் மாலை சூட்டப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
விழாவில் மற்றும் ஒரு சமூக செயற்பாட்டாளர் பாஸ்கரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் இறுதியில் பாரிய DJ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
எனினும் எட்டு மணியளவில் சில அழுத்தங்களால் நிகழ்வு நிறுத்தப்பட்டது.
கடந்த
சிலமாத காலத்துள் பல கோடி ரூபாய்களை மக்களுக்காக செலவுசெய்த தொழிலதிபர்
சசிகுமாருக்கு மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து
வருவது
Post A Comment:
0 comments so far,add yours