எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டு அரசாங்க அதிபரிடம் 250 வரும் பழைமையான யப்பானிய ஓவியம் இன்று கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உளசமூக ஆய்வு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் (17) இடம் பெற்றது.

அகில இலங்கை ரீதியில் கிழக்கு மாகாணத்தில்  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உளவளத்துனை அணுகுமுறை மற்றும் உளசமூக செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மற்றும் யப்பான் நாட்டு அனுகுமுறையையுடன்  ஒப்பிட்டு ஆய்வு முறையை மேற்கொள்வதற்கு  டோக்கியோ பல்கலைக்கழக  பேராசிரியர் மிச்சிகோ ஸ்கிக் அவா   மேற்கொண்டார்.

யப்பான் நாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட உளசமூக ஆய்வுகளையும்  இலங்கையில் காணப்படும் உளசமூக ஆய்வு முறைகளையும் ஆய்வு செய்து பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந் நிகழ்வில்  250 வருடம் பழைமை வாய்ந்த யப்பானிய புகழ்பெற்ற நாடக கலைஞரின் ஓவியம் நினைவுச்சின்னமாக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் உளவள துணை உத்தியோகத்தர்களுடன் பேராசிரியர் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன்  பாடசாலை உளவியலை மேம்படுத்துவதற்கு  தேவையான விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம் சமீன், உளவள துணை இணைப்பாளர் திருமதி சுபாநந்தினி உதயகாந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours