மட்டு அரசாங்க அதிபரிடம் 250 வரும் பழைமை வாய்ந்த ஓவியம் கையளிப்பு
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்கள் "அரசியலில் பெண்கள் தீர்மானிக்கும் சக்தியாக திகழ வேண்டுமென" மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல சமூக ஆர்வலர் செல்வி கந்தையா கலைவாணி தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியைகளுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு
திருவண்ணாமலையில் காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு " ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது"
(பாறுக் ஷிஹான்)
மனித பாவனைக்கு உதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
பழுதடைந்த பழ விற்பனை தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் இன்று (14) மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட சில பழ விற்பனை நிலையங்கள் யாவும் திடீர் பரிசோதனை செய்யப்பட்டன.
இதன் போது பழுதடைந்த பழங்களை விற்பனை செய்த கடை அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்த போது பல பழுதடைந்த பழங்கள் மீட்கப்பட்டன.
மேலும் கடந்த வியாழக்கிழமை (13) அன்று கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு உதவாத சில கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சேர்த்து இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக சமர்ப்பித்த வேளை 5 விற்பனை நிலையங்களுக்கு தலா ரூபா 20,000 - இரண்டு கடைகளுக்கு ரூபா 10,000 - இரண்டு கடைகளுக்கு ரூபா 5,000 என மொத்தமாக ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அத்துடன் பொதுமக்கள் தங்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விழிப்பாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours