(க.விஜயரெத்தினம்)
நேற்றுகாலை செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரடியனாறு மகா வித்தியாலத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் காலை உணவு வாங்கி உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகவீனத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 32ஆண்கள் 22பெண்கள் அடங்களாக 54 மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கும்இமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கரயனாறு பொலிஸார் மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்இமட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours