(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு
கண்ணகி இந்து வித்தியாலய 65 வருட கால சரித்திரத்தில், முதலாவது இல்ல
விளையாட்டுப் போட்டி நேற்று (8) சனிக்கிழமை வித்தியாலய அதிபர்
சீ.திருக்குமார் தலைமையில் விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம் எச் எம்.ஜாபீர் கலந்து சிறப்பித்தார்.
கல்முனை
வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன், பிரதிக்
கல்விப் பணிப்பாளரும் காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளருமான ஆ.சஞ்சீவன் ,
ஓய்வு நிலை காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜே.டேவிட், ஓய்வு நிலை
உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிபர்கள் அதிதிகளாக
கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒஸ்கார் வழங்கிய சிறுவர் பாண்ட் வாத்தியம் முதல்தடவையாக இசைக்க அதிதிகள் வரவேற்கப்பட்டார்கள்.
கன்னி
விளையாட்டு போட்டியில் விவேகானந்த இல்லம் விபுலானந்தா இல்லம் ஆகிய இரு
இல்லங்கள் ஆசிரியர்களான உதயநாதன் மற்றும் பாஸ்கரன் தலைமையில் பங்கேற்றன.
65வருட வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்ற முதல் விளையாட்டு போட்டியில் விவேகானந்த இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
Post A Comment:
0 comments so far,add yours