மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஸ்ண
மிஷன் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியானது
திங்கட்கிழமை (10.3.2025)பிற்பகல் 2.30 மணியளவில் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன்
தலைமையில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தின் பிரதமகுரு சிவாச்சாரியார் லோகநாதகுருக்களும்,
பிரதம
அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் தாபன விதிக்கோவை மற்றும்
பொது முகாமைத்துவ பிரதிக்கல்வி பணிப்பாளர் கே.ஹரிகராஜ்ஜும்,விஷேட அதிதிகளாக
மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.தில்லைநாதன்,மற்றும்
இராமகிருஸ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் பாடசாலை இணைப்பாளரும்,ஆசிரிய
ஆலோசகருமான திருமதி.ஆர்.கைலைநாதன் ,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின்
பதவிநிலை உத்தியோகஸ்தர் திருமதி.சிவநிதி ரவிச்சந்திரன் மற்றும் அண்மித்த
பாடசாலைகளின் அதிபர்கள்,விளையாட்டுக்கழக பிரதிநிதிகள்,ஆசிரியர்கள்,பொது மக்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வில்
அதிதிகளை மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் இசைத்து,காற்று நிரப்பப்பட்ட
பலூண்களை சிறுவர்கள் பிடித்து வரவேற்றுள்ளதுடன்,
தேசியக்கொடி,பாடசாலைக்கொடி, வலயக்கொடி,இல்லங்களின் கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது.
அத்துடன்
ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாணத்துடன் விளையாட்டு விழா
ஆரம்பமாகியும்,அணிநடை மரியாதையும் அதிதிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்வருடாந்த
இல்ல விளையாட்டுப்போட்டியில் சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம்,பாடசாலையின்
பழைய மாணவிகளுக்கான பந்துமாற்றி பிடித்தல்,மாணவர்களின் உடற்பயிற்சி
கண்காட்சி,100 மீற்றர்,200மீற்றர்,400மீற்றர் ஓட்டப்போட்டி,ஈட்டி
எறிதல்,குண்டுபோடுதல் போட்டி உள்ளிட்ட பல திறனாய்வு போட்டிகள்
விவேகானந்தா,இராமகிருஸ்ணா,விபு லானந்தா இல்லங்களுக்கிடையில் நடைபெற்றது.
இவ்விளையாட்டுப்போட்டியில்
விவேகானந்தா இல்லம் 689 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும்,இராமகிருஸ்ணா
இல்லம் 621 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும்,விபுலானந்தா இல்லம் 588
புள்ளிகளையும் பெற்று மூன்றாம் இடத்தையும் தட்டிக்கொண்டது.வெற்றி பெற்ற
இல்லங்களுக்கான கிண்ணங்களையும்,விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ்களையும்
அதிதிகள் வழங்கி வைத்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours