( வி.ரி.சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை வருடாந்தம் புனித நோன்பை முன்னிட்டு நடாத்திவரும் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு   (12) புதன்கிழமை  மாலை நடைபெற்றது.

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் வலயக்கல்விப்பணிமனை வளாகத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் முன்னதாக மாணவர் கிறாஅத் ஓதினார்.

 பிரதிக்கல்விப்பணிப்பாளர் யாசீர் அரபாத் முகைதீன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற  இப்தார் நிகழ்வில் மௌலவி றம்சீன் சிறப்புரையாற்றினார்.

இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்( நிதி) ஏஎம்.றபீக்,முச்சபையின் தலைவரும்  முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருமான ஏ.ஹனிபா,  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.நௌபர்,  முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏஎல்.மஜீட்( அக்கரைப்பற்று )எ.நசீர்( திருக்கோவில்) உதவிக் கல்விப் பணிப்பாளர்களான வி.ரி.சகாதேவராஜா எம்எல்ஏ.கபூர் 
 உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும்  வலய கல்விச் சமுகத்தினரும் கலந்துகொண்டனர்.

பணிமனை முன்றலில் வேறிடத்தில் பெண்கள் இப்தார் நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான் நன்றியுரையாற்றினார்.

முஸ்லிம்கள் செறிந்துவாழும் அம்பாறை மாவட்டத்தில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகள் பரவலாக நடைபெறுவது வழமை.எனினும் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை நோன்பின் ஆரம்ப நாட்களிலே இப்தார் நிகழ்வை நடாத்துவது தனித்துவ சிறப்பம்சமாகும்.

சுமார் 350 தமிழ் முஸ்லிம் சிங்கள  பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours