மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!
விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
பட்டிப்பளையில் புதுவருடத்தினை முன்னிட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி
தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் திறப்பு
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபைக்கான நிரந்தர கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ். மனாசிர் அஹ்சன், தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை (18) மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, நிதி உதவியாளர் யூ. எம். இஸ்ஹாக் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபைக்கு கடந்த ஒரு வருட காலமாக நிரந்தர கணக்காளர் ஒருவர் இல்லாதிருந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் இலங்கை கணக்காளர் சேவையைச் சேர்ந்த ஏ.எஸ். மனாசிர் அஹ்சன் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கு மேலதிகமாக காத்தான்குடி நகர சபைக்கான பதில் கணக்காளராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours