(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையை இலக்காகக் கொண்டு களமிறங்கும் நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழுவின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் சம்மாந்துறை பிரதேச சபையை அறுதிப் பெரும்பான்மையில் கைப்பற்றும் எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை (19) நாபீர் பவுண்டேஷனின் அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் உடனான குழு அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சியாளர் அலுவலகத்தில் வேட்புமனுவை கையளித்த சந்தர்ப்பத்தில், அதன் தலைவர் உதுமான்கண்டு நாபீரிடம் வினவிய சமயம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என கூடுதலான போட்டிகள் நிலவுகின்ற போதும் கடந்த 32 வருட காலமாக நாங்கள் செய்த சேவையின் நிமித்தம் மக்களிடம் நாங்கள் ஆணையைக் கேட்டு நிற்கின்றோம். இன, மத, கட்சி பேதம் பாராமல் பரவலாக மக்களுக்கு செய்த சேவைகளின் அடிப்படையில் இம்முறை குறித்த சம்மாந்துறை பிரதேச சபையை மையமாகக் கொண்டே நாங்கள் களமிறங்குகின்றோம். இதன் வெற்றியின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் எமது அரசியல் பரவலடைந்து செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த கால சேவைகள் அரசியலின் அடிப்படையில் வியாபிக்க வேண்டும் என்பதே எமது பூரண இலக்காகக் காணப்படுகின்றது. அதற்காக எனது மக்கள் எனக்கான அரசியல் அதிகாரத்தை தருவார்கள் என்ற நம்பிக்கையும்  எனக்கு நிச்சயமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours