உரிமைப் பத்திரங்கள் இல்லாத ஆனால் தங்கள் வசிப்பிடத்தை உறுதி செய்யக் கூடிய காணி உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி கடன்களை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் “அனைவருக்கும் வீடு 2025” என்ற வீட்டுவசதி கடன் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்படும் இந்தக் கடன் திட்டத்தின் கீழ், கடன் விண்ணப்பதாரருக்கு சட்டப்பூர்வ பத்திரம் இல்லையென்றால், அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் நீண்ட காலமாக வசித்து வருவதாக கிராம அலுவலர் சான்றளிக்க வேண்டும்.மேலும் இது பிரதேச செயலாளரால் அங்கீகரிக்கப்பட வேண்டும். குறித்து காணி ஒரு காட்டு பகுதிக்கு சொந்தமானது அல்ல என்பதும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படும்.மேலும், கடன் வாங்குபவர் 60 வயது வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம், மேலும் 60 வயதுக்கு மேல் இருந்தால், கூட்டு விண்ணப்பதாரருடன் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.நூற்றுக்கு 12 ரூபாய் என்ற வருடாந்த வட்டி விகிதத்தில் 1.5 மில்லியன் ரூபாய்க்கு விண்ணப்பிக்கலாம். புதிய வீடு கட்ட, வீட்டிற்கு ஒரு பகுதியை சேர்க்க அல்லது வீட்டின் மீதமுள்ள வேலையைச் செய்ய கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் கடனுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் காலம் வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours