வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து-பெறுமதியான பொருட்கள் எரிந்தன
கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல்
அரசியலில் நான் பொய் சொல்லி உழைப்பதற்காக வரவில்லை; மக்களுக்கான எனது சேவை தொடரும்!! என்கிறார் திருக்கோவில் சுயேட்சை தலைமை வேட்பாளர் சசிகுமார்
கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில் மகிழ்ச்சி! முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்
இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது! நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்! பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்
பாறுக் ஷிஹான்
இதற்கமைய கல்முனை பேருந்து நிலையம் பொது நூலகம் அம்மன் கோவில் வீதி தாளவட்டுவான் சந்தி நற்பிட்டிமுனை புறநகர் பகுதி கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை கல்முனை ஆதார வைத்தியசாலை வங்கிகள் தனியார் நிறுவனங்கள் கல்முனை மாநகர பகுதிகள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பகுதி கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி ஆகியவற்றில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உட்பட பாதசாரிகளுக்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் படிக்கட்டுக்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
குறித்த நடவடிக்கைகள் யாவும் அண்மையில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கலந்துரையாடலின் பின்னர் கல்முனை பிராந்தியத்தில் கட்டம் கட்டமாக உரிய உரிய திணைக்களங்கள் கல்முனை மாநகர சபை என்பவற்றுடன் இணைந்து பொதுப் போக்குவரத்து நடைமுறைகள் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச். சமூத்திர ஜீவ கண்கானிப்பின் கீழ் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தவிர கடந்த காலங்களில் பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலையை விட்டு வீடு செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனால் மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்தை சீர்செய்வதற்கு அண்மைக்காலமாக கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்று உரிய நடவடிக்கைகள் எடக்கப்பட்டள்ளளன.
Post A Comment:
0 comments so far,add yours