( க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு கல்வி வலயத்தின்
மண்முனைப்பற்று கோட்டத்திலுள்ள மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா
வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு -2025 நிகழ்வு
மாவிலங்கத்துறை பொது விளையாட்டு மைதானத்தில் அதிபர் காத்தமுத்து திலீபன்
தலைமையில் வெள்ளிக்கிழமை (28.2.2025)மாலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு
பிரதம அதிதியாக மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.தில்லைநாதன்
கலந்துகொண்டார்.இவர்களுடன் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளரும்,தமிழ்பாட
ஆசிரிய ஆலோசகருமான பீ.மேகவண்ணன்,புதுக்குடியிருப் பு விவேகானந்தா கல்லூரி அறக்கட்டளை பணிப்பாளர் கே.பிரதீஸ்வரன்,அதிபர்களான து.குகப்பிரியன்,எஸ்.நந்தகோபால் ,எஸ்.இளங்கீரன்,மற்றும் கிராமசேவையாளர்கள்,ஆலயங்களின் தலைவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர் கள்,மாணவர்கள்,பொதுமக்கள்,விளை யாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது அதிதிகளை மாலை அணிவித்து வரவேற்றதுடன் தேசியக்கொடி,வலயக்கொடி,பாடசாலை கொடி,இல்லக்கொடிகள்
ஏற்றப்பட்டு ,விளையாட்டு தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து
கோட்டக்கல்வி பணிப்பாளரினால் விளையாட்டு விழா ஆரம்பித்து
வைக்கப்பட்டது.இதன்போது மாணவர்களின் திறனாய்வு போட்டிகள்,பெற்றோர்கள்,பழைய
மாணவர்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டிகள்,ஆசிரியர்களுக் கான பலூண் ஊதி உடைத்தல் போட்டிகள்,மாணவர்களின் அணிவகுப்பு,உடற்பயிற்ச்சி கண்காட்சி என்பன இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours