விஜயரெத்தினம்
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற
தேர்தலில் பெண்கள்,மகளிர்கள் அனைவரும் கூட்டிணைந்து பெண் வேட்பாளர்களுக்கு
வாக்களித்து "அரசியலில் பெண்கள் தீர்மானிக்கும் சக்தியாக திகழ வேண்டுமென"
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல சமூக ஆர்வலர் செல்வி கந்தையா கலைவாணி
தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றல் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று(17)கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 36,000மேற்பட்ட பெண்கள் தலைமை குடும்பங்களும்,8000 மேற்பட்ட
மாற்றுத்திறனாளிகளும் கொண்ட யுத்தத்தினால் வடுக்களையும்,இழப்புக்களையும்
சந்தித்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது.இங்குள்ள மக்கள்
வீடுகள்,மலசல கூடவசதிகள் ,அடிப்படை வசதிகளின்றியும் வாழ்வாதார
உதவிகளுமின்றி திணறுவதைக் காணலாம்.இருந்தாலும் இம்மக்களை பகடைக்காய்களாக
வைத்து அரசியல் செய்து பிழைப்பர்கள்தான் இருக்கின்றார்கள்.மக்களுக்கு சேவை
செய்யும் அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும்.இவற்றை துடைத்தெறிய
வேண்டுமானால் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடைபெறவுள்ள தேர்தலில்
பெண்களுக்கு வாக்களித்து தீர்மானிக்கும் சக்தியாக திகழவேண்டுமென கோரிக்கை
விடுத்தார்.
உள்ளுராட்சி
மன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25வீதமாக வழங்கப்பட
இருந்தாலும் எதிர்காலத்தில் அவை இரண்டுமடங்காக
அதிகரிக்கப்படவேண்டும்.இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தற்போது
37வீதமாக பெண்களின் விகிதாச்சாரம் முறையாக பேணப்படுகின்றது.நம்நாட்டில்
இனம்,மதம்,மொழி கடந்து பெண்களின் அரசியல் பிரவேசம் வலுவானதாக
அமையப்பெறவேண்டும்.
பெண்களின்
வாக்குகளை சுவீகரித்துக்கொண்டு ஆண்கள் மட்டும் அரசியல்வாதியாக மட்டும்
மிளிர்கின்றாளே தவிர பெண்களுக்கான அடிப்படைத்தேவைகளான வீடு உள்ளிட்ட
அடிப்படை வசதிகள்,வாழ்வாதார வசதிகள் இன்னும் தீர்க்கப்படாத பிச்சைக்காரனின்
புண்ணாகத்தான் காணப்படுகின்றது.பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,தேவைகளை
வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் அரசியல்வாதிகள்
ஏறெடுத்து பார்க்காத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.எனவே
என்னைப் போன்ற சேவை செய்து பெண்களின் துயரை துடைக்கும் பெண்களுக்கு
வாக்களித்து சேவை செய்யும் அரசியல் அதிகாரம் கிடைக்குமானால் எனது
வேதனத்தையோ அல்லது புலம்பெயர் உறவுகளின் உதவியைக்கொண்டு பெண்கள் தாங்கும்
குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை என்னால் முன்னேற்ற
முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை,கிரான்,வாழைச்சேனை,செங் கலடி,வவுணதீவு,பட்டிப்பளை,வெல் லாவெளி
உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற மக்களின் அடிப்படை
தேவைகள்,குறைபாடுகள்,வாழ்வாதார உதவிகளை அரசாங்கம் முன்னெடுத்து தீர்த்து
வைக்கப்பட்ட வேண்டுமென அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours