க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு
இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை
(04) இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலை
அதிபர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில்,மட்டக்களப்பு
மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்சயன் பிரதம அதிதியாகவும்,மட்டக்களப்பு கல்வி
வலயக் கணக்காளர் திருமதி பி.சுகிஜீஸ்வரன் மற்றும் கல்வி அபிவிருத்திக்கான
பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிதர்ஷினி மகேந் திரகுமார் ஆகியோர்
விஷேட அதிதிகளாகவும்,வலய உடற்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்
வீ.லவக்குமார் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது
மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி,அணிநடை,ஆசிரியர்களின்
துவிச்சக்கரவண்டி ,அஞ்சல் ஓட்டம் ,கயிறு இழுத்தல்போட்டி,ஆகியன அனைவரையும்
கவர்த்தமை குறிப்பிடத் தக்கது.
இப்போட்டியில்
252 புள்ளிகளைப் பெற்ற நல்லையா இல்லம் முதலாம் இடத்தையும், 227
புள்ளிகளைப் பெற்ற சோமசேகரம் இல்லம் இரண்டாம் இடத்தையும்,218 புள்ளிகளைப்
பெற்ற ராஜகாரியர் இல்லம் மூன்றாம் இடத்தையும்,204 புள்ளிகளைப் பெற்ற
குணசேகரம் இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இவ்விளையாட்டுப்
போட்டி நேரமுகாமைத் துவம் மற்றும் விளையாட்டு நியதிகளை உரியவாறு
கடைப்பிடித்து நடைபெற்றதாக அதிதிகள் தமது உரைகளின் போது சுட்டிக்
காட்டினர்.
Post A Comment:
0 comments so far,add yours