க.விஜயரெத்தினம்

இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும்இதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரியும் உண்ணாநோன்பிருந்து உயிர்நீர்த்தி அன்னை பூபதியின் நினைவேந்தல் வாரம்  மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபியில்  (19)நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அன்னை பூபதி நினைவேந்தல் செயற்பாட்டுக்குழு மற்றும் அன்னை பூபதியின் குடும்ப உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.


சிவில் செயற்பாட்டாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை த.ஜீவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தபட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய முன்றிலில் மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு ஏப்பில் 19 ஆம் திகதி உயிர்நீத்தார்.

இதனை 37வது ஆண்டு நினைவாக இம்முறையும் வடகிழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours