(அஸ்லம் எஸ்.மெளலானா)



சமய நூல்களுக்கான கட்டுப்பாட்டை தளர்த்தியமைக்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர்

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில்  செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய சமய புத்தகங்களுக்கான கட்டுப்பாடு அல்லது தடை குறித்து கடந்த பெப்ரவரி 08 ஆம் திகதி இந்த சபையில் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

முந்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட இந்த தடை அல்லது கட்டுப்பாடுகளை ஏன் இந்த அரசாங்கம் இன்னும் மீளப் பெறாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டிருந்தேன்.

அதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதிலளிக்கையில், நாங்கள் இது சம்பந்தமாக உரிய அறிக்கையினை பெற்ற பின்பு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த கட்டுப்பாடை தளர்த்தி உள்ளதாக அறிகிறோம். இதன் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்ட அல்குர்ஆன் தப்ஸீர் (மொழிபெயர்ப்பு) நூல்களும் விடுவிக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கேள்வி மற்றும் வேண்டுகோளை கருத்தில் கொண்டு இத்தீர்மானத்தை மேற்கொண்டமைக்காக விடய அமைச்சர் மற்றும் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன - என்றார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours