தமிழ் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற கட்சி தமிழரசுக் கட்சியே (குருமண்வெளி வட்டார வேட்பாளர் அ.பத்மதேவு)
போதிய ஆளணியின்றி அல்லல்படும் காரைதீவு பிரதம தபாலகம் !
இலங்கையில் உயர் சர்வதேச கற்கைகள் நிறுவகம் (HIEI) "Fastest Growing Educational Institute of the Year" விருதைப் பெற்றுள்ளது.
கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்
சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மக்கள் பாவனைக்கு வருகிறது : முன்னாள் எம்.பி ஹரீஸ் நடவடிக்கை !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு ஸீறா பவுண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பினால் 12 வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளூர் நல்லுள்ளங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் ஒரு தொகை உலர் உணவு பொதிகள் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளை காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது அமைப்பின் ஸ்தாபகரும், ஒருங்கிணைப்பாளருமான யூ.கே. காலித்தீனின் தலைமையிலும், அமைப்பின் பணிப்பாளர் சபையின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளருமான அல் ஹாபில் அஷ்ஷெய்க் மௌலவி நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.
நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி எம்.எம். சலீம் (ஷர்க்கி), சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையின் இடைக்கால சபை தலைவர் வைத்தியர் சனுஷ் காரியப்பர், சாய்ந்தமருது மாளிகைக்காடு கதீப் முஅத்தின் சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ஆதம்பாவா (ரசாதி) கதீப் முஅத்தின் சம்மேளத்தின் உறுப்பினர்கள், ஸீறா பவுண்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
உலமா சபையின் சிரேஸ்ட உறுப்பினரும், மாவடிப்பள்ளி சஹ்தி அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் மௌலவி ஐ.எம். ரஹ்பி (ஹிழ்ரி) அவர்களினால் காலத்தின் தேவையும், முஅத்தீன் கத்தீப்மார்களின் முன்மாதிரியும் எனும் தொனிப் பொருளில் விசேட சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours