( வி.ரி. சகாதேவராஜா)
"நிலையான
எதிர்காலத்தை கட்டியெழுப்ப அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் " என்ற
தொனிப்பொருளின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு
செய்த மகளிர் தின விழா பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் நேற்று
முன்தினம் (08.03.2025) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது
பெண் சுயதொழில் முயற்சியார்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வு
இடம்பெற்றதுடன், சுயதொழில் முயற்சியாளர்களின் அனுபவ பகிர்வும் இடம்பெற்றது.
மேலும்
பெண் சுயதொழில் முயற்சியார்களை கெளரவிக்கும் நிகழ்வும், பாடசாலை
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் மகளிர்
தினத்தை
அலங்கரித்தது.
Post A Comment:
0 comments so far,add yours