( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில்  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர் கல்விமான் மதியூகி அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ நினைவுப் பேருரை இன்று (2-ஞாயிற்றுக்கிழமை)  கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக பற்றிமா தேசிய கல்லூரியின் அதிபர் வண. அருட்சகோதரர் எஸ்ஈ. ஹெஜினோல்ட் (FSC)  கலந்து சிறப்பித்தார்.

நிகழ்விற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி ஜே. அதிசயராஜ் தலைமை வகிக்க, நினைவு நாயகரை பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன்  அறிமுகம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் நினைவுப் பேருரையை “சர்வதேச தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் இலங்கையின் கல்விச் செயன்முறை நகர்கிறதா?” எனும் தலைப்பில்  அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி முன்னாள் பீடாதிபதி சட்டத்தரணி கி. புண்ணியமூர்த்தி நிகழ்த்தினார்.

பேருரையாளர் அறிமுகத்தை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ச. நவநீதனும்  நன்றி உரையை  கலாசார உத்தியோகத்தர் த. பிரபாகரனும் வழங்கினர்.

அருட் சகோதரர் மத்தியூ அடிகளாரின் அபிமானிகள் இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours