கமல்

எனவே களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள என்ரோஸ்கோபி அலகில் நோயாளிகள் அச்சமும் தயக்கமும் இன்றி சந்தோசமாக வருகை தந்து பரிசோதனைகளை மேற் கொள்ள முடியும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் மோ.பிரவன்சன் அவர்கள் தெரிவித்தார்.


களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிய பரிணாமமாக ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான என்டோஸ்கோபி அலகு   17.03.2025 திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியசாலை கணக்காளர் பிரியதர்ஷன்,வைத்தியர்கள், தாதியர்கள்,வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பலம் கலந்து கொண்டனர் இதன் போது  பொது வைத்திய நிபுணர் மோ.பிரவன்சன் அவர்களினால்  குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அவ்வாறு திறந்து வைத்து உரையாற்றும் போதே வைத்திய நிபுணர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

மேற்படி இயந்திரமின்மையால்  எமது பிரதேச மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறித்த இயந்திரம் மூலமான பரிசோதனைக்காக மட்டக்களப்புக்கு அனுப்பப் பட்டனர். அனுப்பியவர்களில் பலர் பரிசோதனைக்கு பயந்து   செல்வதில்லை இவ்வாறு  கஷ்ரப் பிரதேசங்களைச் சேர்ந்த  நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். .

எனவே   இனிவருங் காலங்களில் அவ்வாறான நோயாளிகள்  நாங்களே இந்த பரிசோதனைகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற் கொள்ளலாம். 

அதுமாத்திரமின்றி   உயிர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக வேறு இடங்களுக்கு அனுப்பி காலத்தை விணடிக்க தேவையில்லை நோய் நிலமையை பரிசோதித்து உடன் காலதாமதமின்றி சிகிச்சையனை  சரியான முறையில் மேற் கொள்வதற்கும் குறித்த  பிரிவு எமக்கு துணைபுரியும். 

எனவே களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள என்ரோஸ்கோபி அலகில் அச்சமும் தயக்கமும் இன்றி சந்தோசமாக வருகை தந்து பரிசோதனைகளை மேற் கொள்ள முடியும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.  என இதன் போது தெரிவித்தார் 


இப் பிரிவு எமது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டதும் அச் சிரமம் இல்லால் செய்யப்பட்டுள்ளது

இந்த இயந்திரத்தின் மூலம் வாய் வழியினூடாக அனுப்பியும் ஆசன வழியினூடாக அனுப்பியும் நோய் நிலமைகளை கண்டறிய முடியும். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours