(எம்.எஸ்.எம். ஸாகிர்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பைத்துஸ் ஸகாத் நிதியத்தினால் இவ்வாண்டும் (2025) பைத்துஸ்ஸகாத் வழங்கும் நிகழ்வு இன்று (13) வியாழக்கிழமை சாய்ந்தமருது பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பைத்துஸ்ஸகாத் நிதியத்தின் தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.ரஃபி (ஹிழ்ரி)யின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலின் புதிய
நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், பைத்துஸ் ஸகாத் செயலாளர் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் யூ.எல்.எம். ஹனீபா, பொருளாளர் பிரதேச செயலக ஓய்வுபெற்ற நிதி உதவியாளர் யூ.எல்.எம். ஹனீபா, உப செயலாளர் எம்.சி.எம். அன்வர், பைத்துஸ் ஸகாத் பணிப்பாளர் எம்.ஐ.எம். அஷ்ரப், பைத்துஸ் ஸகாத் உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், பொருளாளர் ஏ.எல்.எம்.முஸ்தபா, உப தலைவர் எம்.எஸ்.எம். முபாரக், உப பொருளாளர் எம்.ஐ. நஜீம் மற்றும் புதிய, பழைய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், தனவந்தர்கள், பரோபகாரிகள் மற்றும் பைத்துஸ் ஸகாத்தில் பணிபுரியும் ஏ.ஏ.சமட் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 103 பயனாளிகளுக்கு இதன்போது 73 இலட்சம் ரூபாய் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அத்துடன் சிறு கைத்தொழிலுக்காக 4 மாவு இடிக்கும் இயந்திரங்களும் 2 தையல் இயந்திரமும் கையளிக்கப்பட்டதுடன் அண்மையில் நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதன்போது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலின் புதிய
Post A Comment:
0 comments so far,add yours