தமிழ் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற கட்சி தமிழரசுக் கட்சியே (குருமண்வெளி வட்டார வேட்பாளர் அ.பத்மதேவு)
போதிய ஆளணியின்றி அல்லல்படும் காரைதீவு பிரதம தபாலகம் !
இலங்கையில் உயர் சர்வதேச கற்கைகள் நிறுவகம் (HIEI) "Fastest Growing Educational Institute of the Year" விருதைப் பெற்றுள்ளது.
கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்
சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மக்கள் பாவனைக்கு வருகிறது : முன்னாள் எம்.பி ஹரீஸ் நடவடிக்கை !
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் முதலாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் மற்றும் உளவளத்துணை சம்மேளன கூட்டம் நேற்று (17) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த காலாண்டுக்கான சிறுவர், மகளிர் மற்றும் உளவளத்துணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் பற்றி சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம. புவிதரன் அவர்களால் சமர்ப்பணம் செய்யப்பட்டதுடன், பிரதேச செயலக பிரிவில் சிறுவர்கள் மற்றும் மகளிர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் கல்வி, சுகாதாரம் உட்பட திணைக்களங்கள் சார்பில் சிறுவர்கள் மற்றும் மகளிர் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், சிறுவர் இல்லங்களின் நடவடிக்கைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் போது எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த வகையில் திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாகவும் பிரதேச செயலாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours