பாறுக் ஷிஹான்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ்  வழிகாட்டலில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தனலெட்சுமி முரசொலிமாறன் தலைமையில்  நடைபெற்றது.

  இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி கங்கேஸ்வரி கமலநாதன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அமலதாஸ், பெண்கள் அபிவிருத்தி மன்றம் ஸ்தாபக தலைவி ருத் சந்திரிகா சுரேஸ், மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.அருள் பிரசாந்தன்,  உளவளத்துணை உதவியாளர் ஐ.எம்.இல்யாஸ்,  மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் யூ.றமீஸா,  உட்பட  பெரியநீலாவணை , நற்பிட்டிமுனை, கல்முனை பிரிவுகளை சேர்ந்த மகளிர் அமைப்பின் மற்றும் கல்முனை மகளிர் மன்றத்தின் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இம்முறை " பெண்கள் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருப்போம் " என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இங்கு வீட்டு வன்முறை பால்நிலை சமத்துவம் மற்றும் மகளிர் தின நிகழ்வு தொடர்பான விழிப்புணர்வு மகளிர் பற்றிய சட்டங்கள், குற்றங்கள், பாதிப்பு மற்றும் போதைப் பொருளினால் சீரழியும் குடும்பங்கள் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு உட்பட பல விடயங்கள்  ஆராயப்பட்டன





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours