(எம்.என்.எம்.அப்ராஸ், ஏ.எல். எம்.சினாஸ்,எம்.எம்.ஜபீர்)
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் பொதுமக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்குகின்ற நிகழ்வு கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் பவுண்டேசனின் கல்முனை காரியாலயத்தில் நேற்று(16) இடம்பெற்றது.
இவ் வாழ்வாதார உலர் உணவு பொதிகளை சீ.எஸ். டப்ளியு. எம்.ஏ(CSWMA) மற்றும் வை.எம்.எம்.ஏ
(YWMA )யின் அனுசரணை வழங்கியதுடன் மற்றும் ஒரு தொகை பேரீச்சம் பழங்களை அல் ஹிக்மா நலன்புரி அமைப்பினரும் வழங்கியிருந்தது.
இதன் போது பொது மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் பொது மக்களுக்கு வழங்கி வைத்தத்துடன் அத்துடன் அங்கு இடம் பெற்ற நிகழ்வில் உலர் உணவு பொருட்கள் மற்றும் உதவி செய்த அனைவருக்கும் தனது நன்றியினை இதன் ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். நிஷார் கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஜெய்ஷான் மற்றும் உலமாக்கள்,பவுண்டேசனின் உறுப்பினர்கள் பயனாளிகள்,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours