கமல்

 களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு முன்வந்து உதவிய நன்கொடையாளர்களை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட "நன்கொடையாளர்கள் கௌரவிப்பு விழா" வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் அவர்களின் தலைமையில் 25.03.2025 அன்று நடைபெற்றது.


வைத்திய சாலை அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கௌரவிப்பு விழாவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இ.முரளீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தர முகாமைத்துவ பிரிக்கு பொறுப்பான வைத்தியர் சகாய தர்சினி, திட்டமிடல் பிரிவுக்கு பொறுப்பான பொறியியலாளர் ரவீந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இக் கௌரவிப்பு விழாவின் போது  2024 ஆம் ஆண்டில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அவசரமாக தேவைப்பட்ட தளபாடம் தொடக்கம் மருந்து பொருட்கள் வரையிலான உதவிகளை மேற் கொண்ட சுமார் முப்பத்தியிரண்டு நன்கொடையாளர்கள்  இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.....


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours