க.விஜயரெத்தினம்
பெரியநீலாவணையில் அமைந்துள்ள சுனாமி
வீட்டுத்திட்ட பிரதான மலசலகூட சுத்திகரிப்பு நிலையம் செயற்படாத
காரணத்தினால் தூர்நாற்றமுள்ள சுகாதார சீர்கேடுகள் நிலவுதாக பொதுமக்கள்
விசனம் தெரிவிக்கின்றார்கள்.
கல்முனை
தமிழ்பிரிவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை -1
கிராமசேவையாளர் பிரிவில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல்கோள்
சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பின்லாந்து நாட்டின் ஐ.சீ.ஆர்
நிறுவனத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட 240 பயனாளிகளின் தொடர்மாடி
குடியிருப்பு பயனாளிகளினதும்,இலங்கை இஸ்லாமிய அகதிகள் நிறுவனத்தினால்
கட்டிக்கொடுக்கப்பட்ட 108 தொடர்மாடி குடியிருப்பு பயனாளிகளினதும் மலசலக்கூட
பிரதான சுத்திகரிப்பு தொகுதி கடந்த 5 வருடங்களாக செயலிழந்துள்ளதால்
தொடர்மாடிக் குடியிருப்புக்களில் அமைந்துள்ள மலசலக்கூடத்தில்
தூர்நாற்றமுள்ள சுகாதார சீர்கேடுகள் நிலவுவதை அவாதானிக்க முடிகின்றது.
தொடர்மாடிக்குடியிருப்புக்களில்
பயன்படுத்தும் மலசலகூடங்கள் குழாய்கள் திறந்தவெளியில்
இருப்பதாலும்,பயனாளிகளின் முறையான கண்காணிப்பு இல்லாதாலும் மலசலகூடம்
சிலவற்றில் குழாய்கள் இவ்வாறு சேதமடைந்துள்ளதாலும் தூர்நாற்ற வாடை
வீசுகின்றது.அவ்வாறே கழிவுநீர்கள் முறையாக அகற்றப்படாததாலும், முறையான
திண்மக்கழிவகற்றல் இல்லாதாலும் பிரதேசத்தில் சுகாதார சீர்கேடுகள்
காணப்படுகின்றது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட க்கிளீன்
ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்காமல்
இருப்பதனாலும் இவ்சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம்
தெரிவிக்கின்றார்கள்.
குறித்த
சுனாமி வீட்டுத்திட்ட பிரதான மலசலக்கூடத்துக்கான சுத்திகரிப்பு
தொகுதிக்கான சுற்றுவேலிகள்,கதவுகள்,உள்ளிட்ட சுத்திகரிப்பு இயந்திரங்கள்
களவாடப்பட்டநிலையில் பிரதான மலசலக்கூடம் செயயிழந்து காணப்படுகின்றது.எனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி பெரியநீலாவணை-1
கிராமசேவையாளர் பிரிவின் தொடர்மாடிக்குடியிருப்பில் நிலவும் சுகாதார
சீர்கேட்டை நிவர்த்தி செய்துதருமாறு கோரிக்கை விடுகின்றார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours