(ஆ.நிதாகரன்)


 மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவன் ஆலய மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 02.04.2025 (புதன் கிழமை)கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.உற்சவ காலங்ககளில் தினமும் காலை உற்சவம் அதிகாலை 5.00 மணிக்கு யாக பூசையுடன் ஆரம்பமாவதுடன் மாலை உற்சவம் 6.00மணிக்கு பஜனையுடன் ஆரம்பமாகி தம்பப் பூசை இடம்பெற்று இரவு 8.00 மணிக்கு வசந்த மண்டப பூசை,சுவாமி உள்வீதி, வெளிவீதி என்பன நடைபெறும் தொடர்ந்து எட்டு நாட்கள்  திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் மகோற்சவ  பிரதமகுரு சிவஸ்ரீ தெ.கு.ஜனேந்திரராஜா குருக்கள் தலைமையில் பூசைகள் இடம்பெறுவதுடன்

11.04.2025 அன்று காலை 7.00 மணியளவில் தீர்த்தோற்சவமும் மாலை 6.00 மணிக்கு பொன்னுஞ்சல் மற்றும் கொடியிறக்கமும் இடம்பெறும்.அனைவரும் வருக சிவனருள் பெறுக என ஆலய அறங்காவலர் சபை மற்றும் திருப்பணிச்சபையினர் வேண்டிக்கொள்கின்றனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours