(எஸ்.அஷ்ரப்கான்)
சர்வதேச
மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அம்பாரை மாவட்ட காரியாலயம் அண்மையில்
உத்தியோகபூர்வமகாக சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக அமைப்பின் இலங்கைக்கான பொது பணிப்பாளர் துவான் ரிஸ்வான்
காசிம் கலந்து கொண்டதுடன் காரியாலயத்தை உத்தியோகபூர்வமகாக
திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி சம்சுதீன் மற்றும்
விசேட
அதிதிகளாக இவ்வமைப்பின் இலங்கைகான பொதுச் செயலாளர் மனோஜ் சஞ்சீவ கொழும்பு
மாவட்ட பணிப்பாளர் கோசலா கஜாநாயக, கண்டி மாவட்ட இளம் பணிப்பாளர் மஹ்மூத்
மற்றும் சாய்ந்தமருது 06 ஆம் பிரிவு கிராம சேவகர் திருமதி ஸஹ்னாஸ்
ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு அம்பாறை மாவட்ட அங்கத்தவர்களுக்கான சுங்கத்துவ அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours