பாறுக் ஷிஹான்



வீடு ஒன்றில் கசிப்புடன் இரு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் உள்ள  வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றது.

 சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில்   கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்   மறைத்து வைக்கப்பட்டிருந்த  19 ஆயிரத்தி 500 மில்லி லீற்றர் கசிப்பு உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இச்சம்பவத்தில்  கைதான  வீரமுனை 04 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய   சந்தேக நபர் மற்றும்  வீரமுனை 01 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் சந்தேக நபர் ஆகியொர் நீண்ட காலமாக இக்கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன்  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 13 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பும்  மற்றவரிடம் இருந்து 6 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இது தொடர்பில் சந்தேக நபர் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க   சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours