நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் எம்.ஆர்.என். சஹான், ஆர்.எம்.அக்ஸத் எனும் இரு மாணவர்களும் தரம் 7இல் கல்வி கற்கும் வை.எம். ஹிக்காம் எனும் மாணவனும் தரம் 11 இல் கல்வி கற்கும் வை.எப். சகாதா எனும் மாணவியும் கல்முனை கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட வலய மட்ட ஒலிம்பியாட் போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டு மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இம்மாணவர்களுக்கும் இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் கே. லோகநாதன் மற்றும் ஏ.எம். தில்சாத் பானு ஆசிரியைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்ட பாடசாலை அதிபர் ஏ.எல் ரஜாப்தீன் மார்ச் 11ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெறவிருக்கும் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டி தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்கும் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours