( வி.ரி.சகாதேவராஜா)

 எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு  பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வேட்புமனு தாக்கல் செய்திருந்தது .

திருக்கோவில் பிரதேச சபைக்கு 8 வேட்புமனுக்கள் முன்வைக்கப்பட்டன, அவர்களில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ( சங்கு) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தெரிந்ததே.

பிரபல சமூக செயற்பாட்டாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு 1 க்கு வண்டில் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அக் குழுவில் இடம் பெறும் 19 வேட்பாளர்கள் வருமாறு..

சுந்தரலிங்கம் சசிகுமார்
(தலைமை வேட்பாளர்),புஸ்பராசா ஹேமகோபிசாந்,பாக்கியராசா மோகனதாஸ்,கணேஷ் வரதனேஷ்,
நாகராசா கிருஜன், தயாபரசிங்கம் பரணிதரன்,தங்கராசா வரதராஜன்,
கனகசபை தேவதாசன், பொன்னையா கேதீஸ்வரன்,
சக்திவேல் சீனுகா,ரவீந்திரன் டிலானி,சிவநாதன் டிலுக்சினி,
கோபாலப்பிள்ளை கமல்ராஜன்,
தம்பிராசா தர்ஷினி,யோகராசா பிரபாகரன்,இராசதுரை ஜெயராசா,
இராஜகோபால் செல்வராஜா,
செல்வநாயகம் ரவிந்திரகுமார் ,
ஆனந்தம் லோயினி
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours