( வி.ரி.சகாதேவராஜா)
75ஆவது
ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல
விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று (7) வியாழக்கிழமை நடைபெற்றது .
ஆறு ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் யாவும் பாடசாலையின் அதிபர் ம.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்வில் பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் ,
கௌரவ அதிதியான கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம்.ஜாபீர்
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் மருதம் இல்லம் முதலிடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது.
முல்லை இல்லம் இரண்டாம் இடத்தையும், குறிஞ்சி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது .
அணி நடை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் பலரையும் கவர்ந்தன.
Post A Comment:
0 comments so far,add yours