(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருது நூறாணியா மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இப்தார்  மற்றும் உலர் உணவுப்பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை மயோன் 
பிளாசா மண்டபத்தில் அன்மையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ் பிறாவின் நெறிப்படுத்தலில்  நூறாணியா மகளிர் சங்க தலைவி பெரோஸா காரியப்பர் தலைமையில்  இடம்பெற்ற
இந்நிகழ்வில் அதிதிகளாக, சம்மாந்துறை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் றம்சான், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மொஹம்மட், சைனிங் ஸ்டார் அமைப்பின் தலைவி தஸ்னீம் காரியப்பர்,  பிரதிநிதிகளான முன்னாள் மாநகர சபை உ றுப்பினர். பஷீரா றியாஸ், சட்டத்தரணி ஆயிஷா, ஜெஸீமா, தென்கிழக்குப் பல கலைக்கழக (SSMA)  ஜெல்மின் மற்றும் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.எல்.எம்.ஹம்ஸா, அம்பாறை தபால் அதிபர் பைசர், சம்மாந்துறை
நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர், ஐ. ஜாபீர்  கல்முனைக்குடி-04 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எம்.நசிர் 
ஆகியோருடன்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மகளிர் சங்க அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வுக்கான அனுசரணையினை கட்டாரில் வசிக்கும் எம்.என். எம்.ஜஸாஉல் சுஜாஹ் (QS) ஸீத்னா அபாத், கணக்காளர் ஏ.எம்.ஆப்தீன், செறூன் ஆப்தீன், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் DR.இர்ஸாத் றஹீம், அமானா இர்ஷாத் 
மற்றும் வர்த்தகர் ஒருவரும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு விசேட பயான் மற்றும் துஆ பிரார்த்தனையை அல் ஹாபிழ் ரியாஸ், மௌலவி  சஜாத்  ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

இதன்போது நூறாணியா மகளிர் சங்க அங்கத்தவர்களு
க்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours