பாறுக் ஷிஹான்


வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சுழல் கலப்பையில் சிக்கி இளைஞன்  உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அகத்திக்குளம் பிரதேச  வயலில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை(22) அன்று மேற்படி பகுதியில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி  16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக   உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க  பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டார்.

குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்ரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி எடுத்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours