பாறுக் ஷிஹான்
நூருல் ஹுதா உமர்


வருடாவருடம் நாபீர் பௌண்டேசன் மேற்கொள்ளும்  புனித ரமழான் நோன்பு காலத்திற்கான உலருணவு விநியோகம் திங்கட்கிழமை(3)   மாலை  சம்மாந்துறை புறநகர் பகுதியில்  நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் ECM நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பொறியியலாளருமான  உதுமான்கண்டு நாபீர் தலைமையில் இடம்பெற்றது.

 குறித்த நிகழ்வானது  பிரதான மார்க்க சொற்பொழிவுடன் கிறாஅத் ஓதப்பட்டு ஆரம்பமானதுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது நிகழ்வின் ஏற்பாட்டாளர்   உதுமான்கண்டு நாபீர்  தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றியதுடன் சகல மக்களும் நாட்டின் அபிவிருத்திக்காக கைத்தொழில் ஒன்றினை மேற்கொள்ளுதல் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.நிகழ்வில்  ஊடகவியலாளர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த உலருணவு பொருட்களில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் சுமார் இதுவரை 100 க்கும் அதிகமான  குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours