செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து
இலங்கையின்
மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 01 ஆம் தேதி
ஆரம்பமாகிறது என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.
முன்னர்
கதிர்காமக்
கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26/07/2025 ம் திகதி
கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 10 ம் திகதி தீர்த்த உற்சவத்துடன்
நிறைவு பெற இருந்தது.
தற்போது திகதி மாற்றத்தையடுத்து
2025
கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூன் 26ம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பிக்கப்பட்டு யூலை 10ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது
என அறியப்படுகிறது.
யாழ்.செல்வச்சந்நதி
ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59
நாள் பாதயாத்திரை யூ ன் மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும்.
அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப் புனித பாதயாத்திரைக் குழுவில் பக்திபூர்வமான முறையில் பங்குபெறவிரும்பும் அடியவர்கள் 0778386381
0763084791
ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours