( வி.ரி.சகாதேவராஜா)




 கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 
 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான Helping a needed School நிகழ்வானது வெகு சிறப்பாக நேற்று முன்தினம் (26/04/2025) சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பற்றிமா மாணவர்களின் திறமையை மாத்திரம் வளர்க்காது பௌதிக வளம் குறைந்த வேறு பாடசாலை மாணவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களின் திறமையை வளர்க்கும் விதத்திலும் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடே இந்நிகழ்வாகும்.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட வீரச்சோலையில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு காணப்பட்ட பௌதீக வளத்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஓர் நிகழ்வு அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் வழிகாட்டலில் இடம் பெற்றது. 

இதன்போது பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியருக்கான ஒரு வருடத்திற்கான ஊக்குவிப்பு தொகை வழங்குவதற்கு முதற்கட்டமாக முதல் மாதத்திற்கான ஊக்குவிப்பு பணம் கொடுக்கப்பட்டது.
 இந்த ஊக்குவிப்பு தொகையினை பாண்டிருப்பை சேர்ந்த பற்றிமா பழைய மாணவர் தற்போது லண்டனில் வசிக்கும் த. குமுதன் 2004 சாதாரண தரம் கல்வி பயின்ற மாணவரால் வருடத்திற்கு வழங்கப்பட இருக்கின்றது. 

மேலும் பற்றாக்குறையாக உள்ள சில விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தளபாடங்கள் மற்றும் மாணவர்களின் கற்றலுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 குறித்தநிகழ்வை சிறப்பாக  ஒழுங்கமைத்த 125ஆவது ஆண்டு நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும்,உதவிகளை வழங்கிய நல்லுள்ளங்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும்  பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்தது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours