ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாளிகைக்காட்டில் !
வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப் போட்டியில் கங்கை இல்லம் சம்பியனாகத் தெரிவு
மருத்துநீர் என்றால் என்ன?
கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம்
கல்முனை பொதுச் சந்தை குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை.!
( வி.ரி. சகாதேவராஜா)
குடும்பத்தால்
கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக இன்று (5)
சனிக்கிழமை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம் முதியோர் இல்லத் திறப்பு விழா
அஜா இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான திருமதி சோதினி அருள்ராஜ்( ஜுடி) தலைமையில் நடைபெற்றது.
இத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து சிறப்பித்தார்.
இந்த
இல்லம் ஸ்தாபகர் திருமதி சோதினி அருள்ராஜ்ஜின் பெற்றோர்களான ராஜேஸ்வரி
கதிரவேல் மற்றும் கதிரவேல் சின்னத்தம்பி ஆகியோரது ஞாபகார்த்தமாக திறந்து
வைக்கப்பட்டது.
இந்த இல்லத்தில் முதலில் குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்று தனிமையான வயோதிப பெண்களுக்கு இடம் அளிக்கப்பட இருக்கிறது .
பின்னர் ஆண்கள் சிறுவர்கள் என இணைத்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.
இங்கே முக்கியமாக உளவளஆலோசனை வழங்கப்படும்.
இவ் ஆலோசனை இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கும் வெளியிலிருந்து ஆலோசனை தேவைப்படுவோருக்கும் வழங்கப்படவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours