மாளிகைக்காடு செய்தியாளர்

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் சுமார் 03 லட்சம் பெறுமதியான அலுவலக தளபாடங்கள் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான இதர உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட சகல பிரதேசங்களிலும் உள்ள பொது நிறுவனங்கள் மற்றும் மத ஸ்தாபனங்களுக்கு தேவையான அபிவிருத்தி மேம்பாட்டு வேலைகள் தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு இந்த அலுவலக தளபாடங்கள் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான இதர உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வெகுஜன தொடர்பாடல் செயலாளரும், காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு பிரதிநிதியுமான யூ.எல். நூருல் ஹுதாவின் இணைப்பில் காரைதீவில் வைத்து இந்த அலுவலக தளபாடங்கள் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான இதர உபகரணங்கள் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிர்வாகிகளிடம் வழங்கி வைக்கப்பட்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours