க.விஜயரெத்தினம்


வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள மண்டூர்- ஆனைகட்டியவெளி போக்குவரத்துக்காக தற்காலிகமாக மீள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் சோமசுந்தரம் ரங்கநாதன் இன்று (27)தெரிவித்தார்.

கடந்த டிசம்பர்மாதம் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதும், மத்திய நீர்ப்பாசன பிரிவுக்குட்பட்டதுமான மண்டூர்-ஆனைகட்டியவெளியை  இணைக்கும் சமுளையடிவட்டை வீதியானது வெள்ளத்தினால் உடைப்பெடுத்துள்ளது.

இதனால் சுமார் நான்கு மாதமாக பொதுமக்கள்,மாணவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள்,விவசாயிகள் பல கிலோமீற்றருக்கு அப்பால் சுற்றியும்,பல ஆயிரம் ரூபாய் பணத்தை  வீண் செலவு செய்து போக்குவரத்து செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இப்பிரதேச மக்கள் முகம்கொடுத்திருந்தனர்.

இதனை தூரநோக்குடனும்,மக்களின் அசௌரியங்களையும் கண்ணுற்ற போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் தமது வழிகாட்டல், ஆலோசனைக்கு அமைவாக போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர்,வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,மத்திய நீர்ப்பாசன பொறியியலாளர்,மண்டூர் கமல அபிவிருத்தி திணைக்களம் ,மற்றும் பொருளாதார உத்தியோகஸ்தர்,கிராமசேவையாளர்,சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டான ஒத்துழைப்புடனும்,இயந்திர பங்களிப்புடனும் துண்டாடப்பட்ட வீதியை தற்காலிமாக சிரமதானத்துடன்  மீள்புனரமைப்பு செய்யப்பட்டு போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளது.




குறித்த வீதியானது உரிமம் கோரப்படாதநிலையிலும்,குறித்த விவசாய கமநல அமைப்பின் அலட்சியப் போக்கிலும்  சுமார் நான்குமாதம் மீள்புனரமைப்பு செய்யப்படவில்லை என்பதோடு குறித்த வீதியை முழுமையாக மீள் புனரமைப்பு செய்வதற்குரிய தொழிநுட்ப உத்தியோகஸ்தரின்  மதிப்பீட்டறிக்கையை வழங்குமாறு  பிரதேச செயலாளர் கோரியுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours