மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!
விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
பட்டிப்பளையில் புதுவருடத்தினை முன்னிட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி
தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் திறப்பு
நூருல் ஹுதா உமர்
அதன் தொடர்ச்சியாக நாவிதன்வெளி மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த அமீரலி விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளுக்காக கடந்த காலங்களில் நிறைய நிதி ஒதுக்கீடுகளை செய்திருந்தார். அதனையொட்டியதாக அப்பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த ஒழுங்கான பார்ப்போர் அரங்கு இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பார்ப்போர் அரங்கின் நிர்மாணப்பணிகளை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டார்.
நிர்மாணப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பார்வையாளர் அரங்கில் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகள் சம்மந்தமாகவும், ஏனைய தேவைகள் சம்மந்தமாகவும் இதன்போது கலந்துரையாடி இருந்தார்.
மேலும் இவ் விஜயத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல், ஊடக விவகார செயலாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் மூலம் விளையாட்டு வீரர்களும், பாடசாலை மாணவர்களும் நிறைவான பலனை அடைவதுடன் எதிர்காலத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை பெற இது வசதியாக இருக்கும் என்றும் இந்த பார்வையாளர் அரங்கு நிர்மாண பணியானது அப்பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய பிரதேச வீரர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours