( வி.ரி.சகாதேவராஜா)



ஜனாதிபதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதிகளை  அப்பட்டமாக மீறி உள்ளார் .சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்மையில் தில் இருந்தால் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுங்கள் பார்க்கலாம் .

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேச சபை வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சி கட்சியின் பதில் செயலாளர். எம்.ஏ சுமந்திரன் சவால் விடுத்தார் .

மேற்படி வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன் தலைமையிலே திருக்கோவில் தம்பிலுவிலில் நடைபெற்றது .

அங்கே சுமந்திரன் மேலும் பேசுகையில் .

இலங்கையிலே ஊழல் அற்ற  தூய்மையான கட்சி என்றால் அல்லது தூய்மையான ஆட்சி என்றால் அது இலங்கை தமிழரசுக் கட்சி ஒன்றுதான்.ஏதோ ஒரு மாற்றம் வேண்டும் என்று இலங்கை மக்கள் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனாதிபதி  தேர்தலிலும் சிவப்புக் கட்சிக்கு வாக்களித்தார்கள் .
ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரையில் முக்கியமானது.

ஏதோ தமிழ் மக்கள் இரண்டு தேர்தல்களிலும் தங்களுக்கு ஆணை தந்துள்ளதாக கடத்துகிறார்கள். அந்த பிரேமையை இந்த தேர்தலில் தகர்க்க வேண்டும்.

 உலகத்திற்கு ஒரு செய்தியை சரியாக நாம் சொல்ல வேண்டும் .

அதாவது 
நாம் என்றும் எமது அரசியல் உரிமைகளுக்காக பயணிக்கும்  தமிழரசுக் கட்சியோடு தான் நிற்கின்றோம் என்ற செய்தி.

அந்த செய்தியை இந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நாங்கள் உரத்திச் சொல்ல வேண்டி இருக்கின்றது .

ஜனாதிபதி அனுர அப்பட்டமாகவே இத்தேர்தலில்
 விதிமுறைகளை மீறி இருக்கின்றார். அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று அரசியல் அமைப்பு எந்த இடத்திலும் சொல்ல இல்லை.

அதனங காரணமாக வழக்கு தாக்கல் செய்யலாம்.
 எனவே 
ஊழலற்ற அரசு அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கின்ற அரசு என்று சொன்னால் இந்த நாட்டிலே வாழ்கின்ற சகல இன மக்களையும் ஒன்றாகவே வழி நடத்த வேண்டும் .

ஆனால் தேசிய மக்கள் சக்தி நடத்துகின்ற சபைகளுக்கு எமது அபிவிருத்திக்கான நிதியை ஒதுக்குவோம் என்று முன்னே கூறிவிட்டு இப்பொழுது அப்படி கூறவில்லையாம் என்று மறுக்கின்றார்கள் .


இப்படித்தான் அனைத்து செயற்பாடுகளும் தொடரஇருக்கின்றது.

 ஆகவே மக்களே நாங்கள் தெளிவடைய வேண்டும் .

ஆகவே தேர்தல் அன்று அக்கம் பக்கம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.  நேராக சென்று நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

 அப்பொழுதுதான் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கலாம். வாழலாம். தவறினால் எமது உரிமைகளை ஒருபோதும் பெறமுடியாமல் போகலாம்.

ஆகவே அனைத்து தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.  என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours