பாறுக் ஷிஹான்

காரைதீவு  பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா   வேட்பாளர் எஸ்.எச்.எம்.சாஜித்  தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவரும் தொழிலதிபருமான கலாநிதி ஹக்கீம் செரீப் பிரதம அதிதியாக   கலந்து கொண்டு  (20.04.2025)  தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்தார்


அங்கு உரையாற்றிய ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு  பிரதேச சபையில்  இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தவர்கள் இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்தவர்கள் எதைச் செய்தார்கள்.அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஒன்றை செய்திருந்தால் இங்கு நாங்கள் வரத் தேவையில்லை. உங்களது பெறுமதியான  வாக்குகளை அவர்களுக்கு வழங்கி விட்டு இன்று  எதை சாதித்து இருக்கிறீர்கள்.எதையுமே சாதிக்கவில்லை .நாங்கள் எமது கட்சியின் சார்பாக இன்று  இளைய தலைமுறைக்கு இடம் கொடுத்துள்ளொம்.   இந்த வட்டாரத்திற்கு ஒரு இளைஞனை களமிறக்கி  இருக்கின்றோம். நாளை அந்த சாஜித் என்ற இளைஞன் காரைதீவு சபையில் இருக்கின்ற போது உங்களுக்காக குரல் கொடுப்பார்.

 எனவே நீங்கள் அவரை ஆதரிக்க வேண்டும் .நாங்கள் கூறி உங்களுக்கு அவரை  தெரிய வேண்டியது இல்லை. அவர் உங்களுடன் இருக்கின்றவர். உங்களுடன் வாழ்ந்து வருபவர்.   நாங்கள்  எதிர்வரும் தேர்தலில்   இரண்டு ஆசனங்களை காரைதீவு பிரதே சபையில்  பெற்றுக் கொள்வது உங்கள் கைகளில் தான் இருக்கின்றது.இதற்காக வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் போராளிகள் முன்னெடுத்துவரும் களச் செயற்பாடுகளை முழு வீச்சுடன் முன்னெடுக்குமாறும்இ  போலிப் பிரச்சாரங்களுக்கு கூட்ட மேடைகளில் தக்க பதில் வழங்கப்படும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிகழ்வில்  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.அகுவர் மாளிகைக்காடு கிழக்கு வட்டார வேட்பாளர்  இளம் ஆளுமை சமூக செயற்பாட்டாளர் ஆர்.எம். தானிஸ் ரஹ்மதுல்லாஹ், வட்டாரங்களின் வேட்பாளர்கள் ,  கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours