நூருல் ஹுதா உமர்

இன்றைய காலகட்டத்தில் தொற்று நோய் மூலம் நிகழும் மரணங்களை விட தொற்றா நோய்கள் மூலம் நிகழும் இழப்புக்களும் மரணங்களும் அதிகரித்து வருகின்றது. தொற்றா நோய்கள் மூலம் நிகழும் இழப்புகளும் பொருளாதார இழப்புகளில் இருந்தும் மீள முடியாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றது.


மக்களிடையே தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வும் மிக குறைவாகவே காணப்படுகிறது. தொற்றா நோய்களிலிருந்து மக்களை விழிப்புணர்வு ஊட்டும் முகமாக இன்று நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சிவசுப்பிரமணியம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஏற்பாட்டில் நிந்தவூர் 11 ஆம் பிரிவு மக்களுக்கு தொற்றா நோய் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது

அத்துடன் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது "ஆரோக்கியமான உணவு ,ஆரோக்கியமான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம்  நிந்தவூர்  11-ம் பிரிவு சேர்ந்த மகளிர் சங்க உறுப்பினர்கள்  இந்த நடைபவனியை ஜின்னா பள்ளிவாசல் வீதியில் ஆரம்பித்து நிந்தவூர் பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலக ஊழியர்களும் இணைந்து இந்நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடித்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours