பாறுக் ஷிஹான்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின்    சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடை மழைக்கு பின்னர் தொடர்ச்சியாக இன்று டெங்கு களத்தடுப்பு நடவடிக்கைகள்    முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதில் இப்பிரதேசத்தில் விசேட டெங்கு  ஒழிப்பு வேலைத்திட்டம்  மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில்  டெங்கு நோயாளியாக  இனங்காணப்பட்டவரின்  வீட்டின்  சுற்றுச்சூழலை  அவதானித்ததன் பின்னர் அப்பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய அபாயம் காணப்பட்டமையினால் அப்பகுதிகளில் உள்ள பல   வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அத்துடன் வீடுகள் மற்றும் சூழல்களை  டெங்கு நுளம்புகள் பரவக்கூடியயதாக வைத்திருந்த  சிலருக்கு  எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன் எச்சரிக்கையுடனான ஆலோசனையும் வழங்கி வைக்கப்பட்டது

மேலும்   மேற்குறித்த  டெங்கு தடுப்பு களப்பணியானது கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  ஜே . மதன்   தலைமையில்  மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் அடங்களான குழுவினர்கள்  நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மேலும் குறுகிய காலத்திலும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய  இடங்கள் அழிக்கப்படுவதுடன் மலசலகூடங்களும் சீரமைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான  வீட்டின் உட்புறத்தையும் சுற்றுப்புற சூழலையும் தொடர்ச்சியாக அவதானித்து டெங்கு நுளம்புகள் பரவுகின்ற இடங்களை சுத்தமாக வைத்திருப்போம் எனும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள்  பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.தற்போது   மழை பெய்து வருவதால் இதற்கமைய டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து தடுப்பதற்கான டெங்கு கள தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.






 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours