அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு -
பிமல் ரத்னாயக்கவினது பொய்களுக்கு கண்டனம் தெரிவித்த சாணக்கியன்..! நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது. 09.04.2025.
வெள்ளி முதல் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
ஐக்கிய நாட்டுக்கான வதிவிட பிரதிநிதிக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.!
சாய்ந்தமருது பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார முகாம் !
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் தூர பிரதேசங்களிலிருந்து கல்முனைக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தருபவர்களுக்குமான இலவச ஸஹர் உணவு விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை இவ்வருடமும் கல்முனையன்ஸ் போரம் மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.
தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் மூலம் இவ்ரமழான் முழுவதும் மொத்தமாக 5438 ஸஹர் உணவு ஏற்பாடுகளை கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் காலடிக்கே சென்று வழங்கப்பட்டது.
மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours