மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக இதுவரை இருநூற்றி பத்து முறைப்பாடுகள் பதிவு!!
திருக்கோவிலில் களைகட்டிய மாற்றத்திற்கான மேதின ஊர்வலம்
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான சிறப்பான சுகாதார மேம்பாட்டு நலசெய்திகளை வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இன்று மட்டக்களப்பில் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுகாதார சேவைகள் தொடர்பான விடயங்களை ஊடகவியலாளர்கள் மத்தியில் தெளிவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (22) திகதி
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றதன்போதே ஊடகவியலாளர்களுக்கு நற்சான்றுப் பத்திரம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் விசேட சுகாதார சேவைகள் சம்பந்தமாகவும் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டங்கள் சம்பந்தமாகவும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக ஊடகத்துறையினருக்கு இதன் போது தொளிவுபடுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் மக்கள் பக்கமிருந்து சுகாதார துறை சார்ந்து தெரிவிக்கப்படும் விடையங்களை இதன் போது தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயரதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours