( வி.ரி. சகாதேவராஜா)

49வது தேசிய விளையாட்டு விழாவின் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  காரைதீவு பிரதேச செயலக அணி சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளது.

காரைதீவு வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்தாட்டத்தில் காரைதீவு பிரதேச செயலக அணியாக காரைதீவு விளையாட்டு கழகம் களத்தில் இறங்கி இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

மொத்தமாக 13 பிரதேச செயலக அணிகள் பங்குபற்றிய இச் சுற்றுப் போட்டி கல்முனை கடற்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 அம்பாறை மாவட்ட மட்ட போட்டிகளின் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் மகா ஓயா பிரதேச செயலக அணியுடன் மோதிய காரைதீவு பிரதேச செயலக பிரிவு சார்பாக கலந்து கொண்ட  காரைதீவு விளையாட்டு கழகம் முதலிடம் பெற்று மாவட்ட சாம்பியனாகியது.

கழக உறுப்பினர்களான வரனுஜன் மற்றும் சதுசன் ஆகியோர் இவ் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர்.

அடுத்து இவர்கள் மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

அம்பாறை மாவட்ட மட்ட போட்டியில் அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி அத்தீக் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களான சுலக்ஷன் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours